நயன்தாரா மற்றும் அனுஷ்கா ஷெட்டி இருவரும் தங்களுக்கென்று தனி பாணியில் கலக்கி வருகின்றனர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம், பெரிய பட்ஜெட் உள்ள படம், நடிக்க ஸ்கோப் உள்ள படம் என தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

nayanthara anushka

வரலக்ஷ்மி சரத்குமார்

சமீப காலமாக வரலக்ஷ்மி நிறைய படங்கள் நடிக்க கமிட் ஆகிறார் என்று தான் சொல்ல வேண்டும். கதாநாயகி மட்டுமன்றி நடிக்க ஸ்கோப் உள்ள படங்களை தேர்வு செய்கிறார் என்பது தான் இவரின் கூடுதல் பிளஸ். விஷாலின் சண்டோக்கோழி 2 , எச்சரிக்கை, கன்னிராசி, விஜய்-62, மிஸ்டர் சந்திரமௌலி, நீயா-2 , பாம்பன் என பல படங்களை கையில் வைத்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் புதியதாக ‘வெல்வெட் நகரம்’ என்ற படத்திலும் நடிக்கிறார்.

அதிகம் படித்தவை:  இப்படியுமா இருப்பார்கள்! தமிழகத்தில் மிரள வைக்கும் குழந்தை வன்கொடுமை
Varalakshmi Sarathkumar

அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் இயக்கும் இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய சைகாலஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் ஜானர் படமாம். 8 வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கதையை உருவாகியுள்ளாராம் இயக்குனர். பழங்குடி மக்களின் உரிமைக்காக போராடும் கதாபாத்திரம் ஹீரோயின் உடையதாம்.

varalakshmi sarathkumar

இப்படத்தின் வரலட்சுமி சரத்குமார் “உஷா” என்ற ஜெர்னலிஸ்டாக நடிக்கிறாராம். மேலும் ரமேஷ் திலக், சூப்பர் சிங்கர் மாளவிகா, அர்ஜை முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

உறுமீன், யானும் தீயன் படப்புகழ் அச்சு ராஜாமணி இசை. மேக்கர்ஸ் ஸ்டுடியோ என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். முழுக்க முழுவதும் சென்னையில் ஷூட்டிங் செய்ய உள்ளனர். மே முதல் வாரத்திற்குள் முழு ஷூட்டிங்கையும் முடிக்க திட்டமிட்டுள்ளார் படக்குழு.