Sports | விளையாட்டு
விக்கெட் சக்ரவர்த்தியாக மாறிய வருண்! கோட்டை விட்ட சிஎஸ்கே தட்டி தூக்கிய ஷாருக் கான்
வருண் சக்கரவர்த்தி தமிழகத்தை சேர்ந்த மிஸ்டரி ஸ்பின்னர்.
தஞ்சாவூரை சேர்ந்தவர். இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் ஆடியவர். 13 வயதில் விக்கெட் கீப்பர் பாட்ஸ்மான் ஆக இருந்தவர். அதன் பின்னர் SRM யூனிவர்சிடியில் B Arch படித்தார், பின்னர் இரண்டு வருடம் முழு நேர வேலை. பின்னர் க்ளப் கிரிக்கெட் என்று இருந்தது இவரின் கிரிக்கெட் பயணம். வேகப்பந்து வீச்சாளாராக தொடர்ந்த இவர் ஸ்பின் பக்கம் மாறினார். கெட்டதிலும் நல்லதாக அது அமைந்தது இவருக்கு.
க்ளப் கிரிக்கெட்டில் அசத்தினார், பின்னர் சி எஸ் கே டீம்மின் நெட் பௌலர் வாய்ப்பு வந்தது. தினேஷ் கார்த்திக் வாயிலாக கொல்கத்தா அணி நெட் பௌலர் வாய்ப்பு கிடைத்தது. பல யுத்திகளை கற்றார். பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், சுனில் நரேனின் சந்திப்பு, நல்ல பயிற்சி தளம் அமைந்தது இவருக்கு.
முந்தையை சீசன் அஸ்வினின் பஞ்சாப் டீம்மில் 8.4 கோடிக்கு விலை போனார். ஆனால் ஆடியது ஒரே போட்டி தான், அதிலும் இவர் வீசிய முதல் ஓவரை நரேன் தெரிக்காவிட்டார். விரலில் காயம் ஏற்பட மனிதர் ஊருக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டது.

CV-Varun
இந்த புதிய சீசன் கேப்டனான தினேஷ் வருணுக்கு வாய்ப்பு கொடுக்க, சிறந்த பௌலிங்கை அவர் வெளிப்படுத்து வந்தார். எனினும் நேற்றயை போட்டி வருணுக்கு தனி மணிமகுடம் ஆனது.
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. ராணா மற்றும் நரேன் அடித்து விளாசினர். அடுத்து ஆடிய டெல்லி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களுக்கு சுருண்டது. 5 விக்கெட்டுகள் வீழ்த்தி டெல்லி பேட்டிங் வரிசையை சரித்த கொல்கத்தா சுழற்பந்துவீச்சாளா் வருண் சக்கரவா்த்தி ஆட்டநாயகன் ஆனாா்.
டெல்லிங் பேட்டிங் சமயத்தில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் பண்ட் சிறப்பாக ஆடி வந்த சூழ்நிலையில் தான் வருண் பந்து வீச வந்தார். முதல் ஓவரில் தான் வீசிய இரண்டாவது பந்திலேயே பண்ட் விக்கெட்டை எடுத்தார்.
இரண்டாவது ஓவரின் முதல் பந்தை ஷ்ரேயாஸ் தூக்கி அடிக்க அதைப் பிடிக்க வருண் முயல கேட்ச் மிஸ் ஆனது. ஆனால் அடுத்தடுத்து ஸ்ரேயா மற்றும் ஹெட்மயரையும் அவுட் ஆக்கினார்.
அடுத்தபடியாக ஆல் ரௌண்டார்கள் அக்ஸர் படேல் மற்றும் ஸ்டாய்னிஸ் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 4 ஓவரில் 20 ரன் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வருண். இந்த சீசனில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் இவர் தான்.
இது போன்ற உள்ளூர் சூப்பர் வீரரை சென்னை மிஸ் செய்துவிட்டு சாவ்லா பக்கம் சென்றதே என புலம்பி வருகின்றனர் சி எஸ் கே ரசிகர்கள்.
