fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

எளிய முறையில் நடந்தது வருண் சக்கரவர்த்தியின் திருமணம்! க்யூட் ஜோடியின் போட்டோ உள்ளே

Tamil Nadu | தமிழ் நாடு

எளிய முறையில் நடந்தது வருண் சக்கரவர்த்தியின் திருமணம்! க்யூட் ஜோடியின் போட்டோ உள்ளே

தமிழகத்தை சேர்ந்த மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. இவரது வாழ்க்கையை வைத்தே ஒரு சூப்பர் படம் எடுக்கலாம். அந்தளவுக்கு சுவாரஸ்ய நிகழ்வுகள் உண்டு.

தஞ்சாவூரை சேர்ந்தவர். இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் ஆடியவர். 13 வயதில் விக்கெட் கீப்பர் பாட்ஸ்மான் ஆக இருந்தவர். அதன் பின்னர் போதிய வாய்ப்பு இல்லை, படிப்பில் கவனம் செலுத்தினார். SRM யூனிவர்சிடியில் B Arch படித்தார், பின்னர் இரண்டு வருடம் முழு நேர வேலை. பின்னர் க்ளப் கிரிக்கெட் என இருந்தது இவரின் கிரிக்கெட் பயணம். வேகப்பந்து வீச்சாளாராக தொடர்ந்த இவர் ஸ்பின் பக்கம் மாறினார். கெட்டதிலும் நல்லதாக அது அமைந்தது இவருக்கு.

TNPL , ஐபிஎல் டு இந்தியன் டீம் என முன்னேறினார். எனினும் காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் இருந்து மாற்றப்பட்டார்.

நேற்று  தனது நீண்டகாலத் தோழியை நேஹாவை நேற்று மணந்தார். மிகவும் எளிய முறையில் நடந்த இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. இரு வீட்டார் மட்டுமே பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.

varun chakrvarthy marriage

வாழ்த்துக்கள் வருண் ப்ரோ.

Continue Reading
To Top