திருமண கோலத்தில் இருக்கும் பிக்பாஸ் வருண், அக்ஷரா.. காதலை கன்பார்ம் பண்ணிய ரசிகர்கள்

கடந்த ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பு செய்யப்பட்டது. எல்லா சீசன்களை காட்டிலும் இந்த சீசன் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. ஏனென்றால் அடிக்கடி சண்டைகள் வந்தாலும் உடனே சமாதானம் ஆகி விடுவார்கள்.

மேலும் அந்தப் போட்டியில் ராஜூ டைட்டில் வின்னர் பட்டத்தை பெற, ரன்னர் அப் பட்டத்தை பிரியங்கா பெற்றார். இந்நிலையில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஜோடியாக இந்த சீசனில் பங்குபெற்றவர்கள் வருண் மற்றும் அக்ஷரா. இவர்கள் இருவரும் ஒன்றாகவே பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஒன்றாகவே எலிமினேட் ஆன சிறந்த ஜோடி என்ற பெயரையும் பெற்றனர்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் இருவரும் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்தனர். அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் இவர்கள் இருவரும் இடம் பிடித்தனர்.

இந்நிலையில் வருண் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தாமரைக்கு உதவியதை பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் தன் படங்களிலும் வருண் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அக்ஷரா மற்றும் வருண் இருவரும் அடிக்கடி சுற்றுலா செல்லும்போது எடுக்கப்படும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவுகிறது.

மேலும் விளம்பரங்களிலும் ஜோடியாக நடித்து வந்தனர். இப்போது வருண், அக்ஷரா இருவரும் திருமண கோலத்தில் உள்ள புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவர்கள் நிஜமாகவே காதலித்து வருகிறார்கள் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்கயுள்ளது என கூறிவந்தனர்.

இது பிரபல மீடியா இணையதளத்திற்காக அக்ஷரா, வருண் இருவரும் போட்டோ ஷூட் நடத்தி உள்ளனர். இதை அறிந்த ரசிகர்களும் ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது. விரைவில் உங்களுக்கு நிஜமாகவே திருமணம் நடக்க வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.

Varun Akshara
Varun Akshara
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்