Tamil Cinema News | சினிமா செய்திகள்
செல்வி ஜெயலலிதாவின் பயோபிக்கில் சசிகலா வேடத்தில் நடிப்பது வரலக்ஷ்மி சரத்குமாரா ? வெளியானது அதிகாரபூர்வ தகவல் !

ஜே ஜெயலலிதா
தமிழகத்தின் மறைந்த முதலவர் அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக ஆக்குவதற்கு, சில பல மாதங்களாக பலத்த போட்டி நிகழ்ந்து வந்தது. பாரதிராஜா, ஏ. எல். விஜய் , பிரியதர்ஷினி என பலர் ஆர்வம் கட்டி வந்தனர். இந்நிலையில் இப்படத்தை இயக்கும் வாய்ப்பு ப்ரியதர்ஷினிக்கு சென்றது. இவர் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர். மேலும் வரலக்ஷ்மி சரத்குமாரை வைத்து “சக்தி” என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
The Iron Lady

The Iron Lady
படத்தை ‘பேப்பர் டேல் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறதாம்.இப்படத்துக்கு ‘The Iron Lady’ என டைட்டில் சூட்டப்பட்டது. மேலும் அந்த டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டார்.
ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. இந்நிலையில் அவரின் உடன் பிறவா தோழி சசிகலா வேடத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டது.

varalakshmi sarathkumar
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வரலக்ஷ்மி தன ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுளார். “உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. பிரியதர்ஷினி இயக்கும் THEIRONLADY படத்தில் எதுவும் இன்னமும் முடிவாகவில்லை. அவ்வாறு நிகழும் பொழுது நானே உங்களுக்கு முதல் ஆளாக சொல்வேன் , நன்றி. வெளிநாட்டு செல்லும் காரணத்தால் , பத்திரிக்கையாளர்களின் அழைப்பை எடுக்க முடியவில்லை. வருந்துகிறேன்.” என்பது அது.
சினிமாபேட்டை காமெண்ட்ஸ்
நெருப்பில்லாமல் புகையாதே, ஹ்ம்ம் … ஒருவேளை ஆளும்கட்சி ஓகே சொல்லும் விதத்தில் தான், இந்த ரோலுக்கு யார் சரிப்பட்டு வருவார் என்பது முடிவாகுமோ ???
