fbpx
Connect with us

மாரி 2 ஷூட்டிங்கில் வரலக்ஷ்மி சரத்குமார். லேட்டஸ்ட் போட்டோ உள்ளே !

News | செய்திகள்

மாரி 2 ஷூட்டிங்கில் வரலக்ஷ்மி சரத்குமார். லேட்டஸ்ட் போட்டோ உள்ளே !

2015ல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ஹிட் ஆன மாரி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி சில நாட்களாகவே, பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

maari2

இப்படத்தில் தனுசுடன், மலையாள நடிகர் டோவினோ தாமஸ், ப்ரேமம் புகழ் சாய் பல்லவி, விஷ்ணுவர்தனின் தம்பி கிரிஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது.

Varu Sarathkumar

இதில் வரலக்ஷ்மி நடிக்கும் பகுதியின் சூட் செய்யப்படுகிறது. இதை வரலக்ஷ்மியே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்து உறுதி படுத்தியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். படத்தை தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top