News | செய்திகள்
இதுஎன்னடா வர்மா பட ஹீரோயினிக்கு வந்த சோதனை. மீண்டும் துருவாவுடன் ஜோடி சேருவாரா…
அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா படம் கைவிடப்பட்டுள்ளது. பாலா இயக்கிய இந்த படத்தில் துருவாக்கு ஜோடியாக புதுமுகம் மேகா சவுத்ரி நடித்திருந்தார்.

varmaa hero
துருவாவிக்ரமை வைத்து வேறு ஒரு இயக்குனர் வர்மாவை இயக்குவார் என்று படக்குழு தெரிவித்தது. மேகா சவுத்ரி வர்மா படம் கைவிடப்பட்ட தகவல் மேகா சவுத்ரிக்கு தெரியாதாம். நீங்கள் நடித்த வர்மா படம் கைவிடப்பட்டுள்ளது என்று நீங்க கேட்டபிறகுதான் எனக்கே தெரியும் என கூறியுள்ளார். ஆனால் ஹீரோயினும் மாற்றப்படுகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வர்மா பாலா ஒழுங்காக எடுக்காததால் வர்மா கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த படத்தை பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது. பாலா இயக்கிய வர்மா படத்தை ரிலீஸ் செய்தால் அதில் அவர் அப்படி என்ன தான் தவறு செய்தார் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர் .
