Connect with us
Cinemapettai

Cinemapettai

புதிய இயக்குனருடன் மீண்டும் ரெடி ஆகப்போகிறது துருவ் விக்ரமின் “வர்மா”. காரணம் இது தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புதிய இயக்குனருடன் மீண்டும் ரெடி ஆகப்போகிறது துருவ் விக்ரமின் “வர்மா”. காரணம் இது தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

அர்ஜுன் ரெட்டி

விஜயதேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம். துருவ் ஆசைப்பட அப்பா விக்ரமின் ஆதரவுடன் இப்படம் தமிழில் ரிமேக் செய்வது உறுதியானது.

Arjun-Reddy

வர்மா

தனக்கு அமைந்தத அறிமுகம் போல் இருந்துவிடக் கூடாது என்று முடிவு செய்த விக்ரம் பாலாவை இயக்குனர் ஆக்கினார். மேகா என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முதலில் 2018-ம் ஆண்டு டிசம்பர் வெளியீடாக இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாத காரணத்தால் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவித்தது படக்குழு.

varma-trailer-released

varma-trailer-released

வர்மா ட்ரெய்லர் வெளியீட்டின்போது காதலர் தின வெளியீடாக கொண்டுவரத் திட்டமிட்டனர். ஆனால், தற்போது அதிலிருந்து பின்வாங்கினர் . மார்ச் மாதத்தில் திரைக்கு வரும் என பேசிவந்த சூழலில் தற்பொழுது புதிய அறிவிப்பு வந்துள்ளது.

அதன் படி “பர்ஸ்ட் காபி அடிப்படையில் பி ஸ்டுடியோஸுக்கு கொடுத்தோம். எனினும் பைனல் வெர்ஷன் பார்த்து எங்களுக்கு திருப்த்தி இல்லை. பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. எனவே இதனை நாங்கள் ரிலீஸ் செய்யமாட்டோம். துருவை வைத்து மீண்டும் அந்த ஒரிஜினல் படம் போல ஆத்மார்த்தமாக எடுப்போம்.

விரைவில் இயக்குனர் , மற்ற நடிக நடிகையர் பற்றிய அறிவிப்பு வரும்.

varma

இதனால் பலத்த பண நஷ்டம். எனினும் படத்தின் தரம் குறையாமல் எடுக்க விரும்புகிறோம். ஜூன் 2019 என்ற ரிலீஸை நோக்கி டீமாக வேலை செய்கிறோம்.

உங்களின் ஆதரவும் ஆசியும் தேவை” என அதில் பதிவிட்டுள்ளார்.

இந்த தகவல் கோடம்பாக்கத்தையே ஆசிரிய பட வைத்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top