Tamil Cinema News | சினிமா செய்திகள்
(அர்ஜுன் ரெட்டி ரீமேக்) விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா போஸ்டர் வெளியானது.!
கடந்த ஆண்டு வெளியான தெலுங்கு படங்களில் அதிக வசூலான படங்களில் அர்ஜுன் ரெட்டி திரைப்படமும் ஒன்று, இந்த திரைப்படம் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டது, விஜய்க்கு இந்த திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது.

varma
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்து விக்ரமை அணுகினார்கள் துருவை கதாநாயகனாக, இதற்கு ஒப்புக் கொண்ட விக்ரம் தனது நண்பரான இயக்குனர் பாலாவை இந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று பாலாவிடம் சென்றார் பாலாவும் இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டார், இந்த திரைப்படம் பாலாவிற்கு முதல் ரீமேக் திரைப்படமாகும்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டது அதனால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது, விக்ரமின் மகன் பிறந்தநாளுக்கு இந்த படத்தின் போஸ்டரை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தற்பொழுது போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
