fbpx
Connect with us

Cinemapettai

துருவ் விக்ரமின் “வர்மா” மீண்டும் ரி ஷூட் செய்து இயக்க இவர் தான் பெஸ்ட் சாய்ஸ். என்ன சரி தானே நாம் சொல்வது ?

News | செய்திகள்

துருவ் விக்ரமின் “வர்மா” மீண்டும் ரி ஷூட் செய்து இயக்க இவர் தான் பெஸ்ட் சாய்ஸ். என்ன சரி தானே நாம் சொல்வது ?

அர்ஜுன் ரெட்டி

விஜய தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம். துருவ் ஆசைப்பட அப்பா விக்ரமின் ஆதரவுடன் இப்படம் தமிழில் ரிமேக் செய்வது உறுதியானது.
பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வர்மா

”பைனல் வெர்ஷன் பார்த்து திருப்த்தி இல்லை. பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. எனவே இதனை நாங்கள் ரிலீஸ் செய்யமாட்டோம். துருவை வைத்து மீண்டும் அந்த ஒரிஜினல் படம் போல ஆத்மார்த்தமாக எடுப்போம். விரைவில் இயக்குனர் , மற்ற நடிக நடிகையர் பற்றிய அறிவிப்பு வரும். ஜூன் 2019 என்ற ரிலீஸை நோக்கி டீமாக வேலை செய்கிறோம். உங்களின் ஆதரவும் ஆசியும் தேவை” என அறிக்கை வெளியிட்டனர் இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ்.

varmaa

varmaa

இரண்டு நாட்களாக யார் அந்த இயக்குனராக இருப்பார் என்பதே கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக். தெலுங்கு வெர்ஷனே தாறுமாறு படம். பாலா போன்ற இயக்குனர் எடுத்து சரியில்லை எனில் அதை மாறுதல் செய்து எடுக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

கெளதம் மேனன்

dhuruvanatchatiram

இது போன்ற பணியை புதிய இயக்குனர் ஒருவர் எடுப்பாரா என்றால் அது கடினம் தான். ஆகவே அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் தான் செல்ல வேண்டும். இது போன்ற ப்ரொஜெக்டை எடுத்து சக்ஸஸ் செய்யும் திறன் கட்டாயம் கெளதம் மேனனிடம் உள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா போல காதலும் எடுத்துள்ளார்; வாரணம் ஆயிரம் படத்தில் லவ் பிரேக் அப்பும் எடுத்து ரசிகர்களை கவர்ந்தவர். துருவநட்சத்திரம் படத்தின் வாயிலாக இவரும் விக்ரமும் க்ளோஸ் எனவே நட்புக்காக செய்யக் கூடியவர்.

ஏற்கனவே நரகாசூரன், எனை நோக்கி பாயும் தோட்டா, துரவநட்சத்திரம் என பல சர்ச்சைகளில் சிக்கினாலும் எதற்கும் அசரதவர் இவர். எனவே இத்தகைய நிலையில் வர்மா படத்தில் நுழைந்து, அதனை கட்டாயம் ஹிட் ஆக்கும் திறன் இவருக்கு மட்டும் தான் உள்ளது.

எனவே பலரும் கிசு கிசுப்பது போல இவரே படத்தை இயக்கும் பட்சத்தில் துருவ் மற்றும் விக்ரம் நிம்மதியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top