Connect with us

Videos | வீடியோக்கள்

அன்போ, அடியோ பார்த்து கொடுக்கணும், திரும்ப ட்ரிபிள் மடங்கு கொடுப்பேன்.. அன்பு பயத்தை காட்டிய வாரிசு டிரைலர்

தற்போது வெளிவந்துள்ள வாரிசு ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் மிக வேகமாக ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

varisu-trailer-video

கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவை திறந்தாலே வாரிசு பற்றிய பதிவுகள் தான் ஆக்கிரமித்து இருக்கிறது. அதிலும் இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய நாளாக அமைந்திருக்கிறது. அதாவது ரசிகர்கள் பலரும் பெரும் ஆவலுடன் காத்திருந்த வாரிசு படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காலை முதலே ட்விட்டர் தளம் மிகவும் பரபரப்பாக இருக்கிறது.

வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் புத்தாண்டு தினத்தன்று வெளியாகி இருக்க வேண்டிய இந்த ட்ரெய்லர் சில தாமதத்தினால் தள்ளி போடப்பட்டது. இது சில விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் துணிவு திரைப்படத்தின் டிரைலரும் அதிரடியாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது.

Also read: மேடையில உளரும் போதே தெரிஞ்சது, வாரிசு முழுக்க முழுக்க அந்த மாதரி படம்.. குண்டத்தூக்கி போட்ட விஜய்யின் ப்ரோ!

இந்த இரு படங்களும் அடுத்தடுத்த நாளில் வெளியாக இருப்பதை தொடர்ந்து தற்போது மீடியாக்களின் கவனம் வாரிசு, துணிவு மேல் அதிகமாக படிந்து இருக்கிறது. அதிலும் இந்த படங்கள் குறித்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருந்த ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காலையிலிருந்தே ஒவ்வொரு மணி நேரத்தையும் கஷ்டப்பட்டு தள்ளிக் கொண்டிருந்தனர். அது மட்டுமல்லாமல் இந்த ட்ரெய்லரை யூடியூப்பில் சாதனை படைக்கும் அளவுக்கு கொண்டாடுவோம் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

Also read: வாரிசு சக்சஸ் ரேட்டை இப்பவே உறுதி செய்த சென்சார் போர்டு.. கதிகலங்கிய வம்சி

இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த வாரிசு ட்ரைலர் தற்போது அதிரிபுதிரியாக வெளியாகி உள்ளது. ஏற்கனவே இப்படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது வெளிவந்துள்ள ட்ரெய்லர் படுமாஸாக இருக்கிறது.

மேலும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இருப்பதும் பார்வையாளர்களை மிரள வைத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் மிக வேகமாக ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

Continue Reading
To Top