வாரிசு படத்தால் 9 படங்களை இழக்க நேரிடும்.. தியேட்டர் உரிமையாளருக்கு செக் வைத்த உதயநிதி

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் விஜய் படங்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். கோவிட் தொற்று காரணமாக படங்களை வெளியிட பலரும் பயந்தனர்.

ஆனால் விஜய் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிட்டு நல்ல லாபத்தை பெற்று தர செய்தார். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வாறு விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் தியேட்டர் உரிமையாளருக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது. ஆனால் வாரிசு படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

Also Read : தில் ராஜூ உடன் இணையும் 100 கோடி வசூல் நடிகர்.. வாரிசு விஜய்க்கு பின் போட்ட அடுத்த ஸ்கெட்ச்

ஏனென்றால் வாரிசு படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு படம் வெளியாகிறது. இந்தத் துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வெளியிடுகிறது. சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களை உதயநிதி விநியோகம் செய்து வருவதால் துணிவு படத்திற்கு அதிக திரையரங்குகள் கேட்டுள்ளார்.

வாரிசு படத்திற்கு தியேட்டர் கொடுக்க உரிமையாளர்கள் ஆசைப்பட்டாலும் உதயநிதி சுற்றுவட்டாரங்கள் வைத்த செக்கினால் மாட்டி தவிக்கின்றனர். அதாவது பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை அடுத்தடுத்து உதயநிதி தான் வெளியிட உள்ளார்.

Also Read : பீதியைக் கிளப்பிய வலிமை, பீஸ்ட்.. வாரிசு படத்தால் திருப்தி அடையாத விஜய்

இவ்வாறு உதயநிதி கிட்டத்தட்ட ஒன்பது படங்களை அடுத்தடுத்து வெளியிடுகிறார். இப்போது வாரிசு படத்திற்கு கிடைக்கும் லாபத்தை நம்பி வெளியிட்டால் அடுத்ததாக வெளியாகும் 9 படங்கள் இந்த தியேட்டருக்கு கிடைக்காது. ஆகையால் இப்போது துணிவு படத்தை வெளியிடுவதில் தான் தியேட்டர் உரிமையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இதனால் வாரிசு படத்திற்கு தமிழகத்தில் வசூல் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சென்னையில் சில முக்கியமான இடங்களில் வாரிசு படத்தையும் உதயநிதி தான் வெளியிடுகிறார். மேலும் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாக இன்னும் குறைந்த நாட்களை உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Also Read : வாரிசு, துணிவை விட இந்த படங்களுக்கு தான் எதிர்பார்ப்பு ஜாஸ்தியா.. 2023-னின் ஆரம்பத்திலேயே ரணகளமாகும் இணையதளம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்