வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தளபதி விஜய்யை வெச்சு செய்த படக்குழு.. சரத்குமார் என்னய்யா பாவம் பண்ணாரு?

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குடும்ப சென்டிமெண்ட் கலந்த படம் என்பதால் ஏராளமான திரைப்படத்தில் நடக்கின்றனர். பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சரத்குமார், பிரபு, சங்கீதா, ஷ்யாம், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

வாரிசு படத்தை வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் விஜய் பிறந்த நாளன்று வாரிசு படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி விஜய் ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.

இந்நிலையில் விஜய் பிறந்த நாள் அன்று கூட விஜயை விட்டுவைக்காமல் படக்குழுவினர் சூட்டிங் இருக்கிறது என்று அழைத்துள்ளனர். இதுவரை விஜய் தனது பிறந்த நாளன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டதில்லை. ஆனாலும் படக்குழு வற்புறுத்தியதால் வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார்.

ஆனால் அங்கு பிரம்மாண்ட கேக்கை ஏற்பாடு செய்து அவரை வாரிசு படக்குழு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அன்று விஜய்க்கு மட்டுமல்லாமல் சரத்குமாருக்கும் சூட்டிங் இல்லையாம். ஆனால் அவரையும் வம்படியாக படக்குழு அழைத்திருந்தது.

மேலும் படப்பிடிப்புக்காக வந்த சரத்குமார் விஜய் பிறந்தநாளில் சந்தோஷமாய் கலந்து கொண்டு சென்றுள்ளார். விஜய்க்கு தான் அன்று பிறந்தநாள் என்றாலும் சரத்குமார் பல வேலைகளில் பிஸியாக இருக்கும் போது அவரையும் சூட்டிங்கிற்கு அழைத்து விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வைத்துள்ளனர் வாரிசு படக்குழு.

மேலும் இப்படத்தில் விஜய்க்கு அப்பா கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் முதல்முறையாக சரத்குமார், விஜய் இருவரும் வாரிசு படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Trending News