மாரி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் வரலக்ஷ்மி சரத்துக்குமார் நடிக்கிறார்.

2015ல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ஹிட் ஆன மாரி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி சில நாட்களாகவே, பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் அனைத்தையும் இயக்குனர் பாலாஜி மோகன் தன் ட்விட்டரில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.


இப்படத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், ப்ரேமம் புகழ் சாய் பல்லவி, விஷ்ணுவர்தனின் தம்பி கிரிஷ்ணா, நடிப்பது உறுதியான நிலையில் இவர்களுடன் வரலக்ஷ்மி சரத்குமாரும் இணைந்துள்ளார் என்பதை இயக்குனர் தன் ட்விட்டரில் உறுதி செய்தார்.


வயது அதிகரித்தாலும், தன் சினிமா மார்க்கெட், ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்று ஹீரோயினாக மட்டும் நடிக்கும் நடிகைகள் மத்தியில் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் வரலக்ஷ்மி சிறப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

பலரும் வரலட்சுமிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  வெளியானது 'இமைக்கா நொடிகள்' படத்தின் "விளம்பர இடைவெளி" பாடல் லிரிக் வீடியோ !