வரலட்சுமியின் தந்தை என்பதால் எனக்கு சரத்குமாரை பிடிக்கும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் எப்போதுமே காதோடு காது வைத்தது போல நடந்து முடிந்து விடும். சில வருடங்களுக்கு முன்னர், சரத்குமாரின் தலைமையில் தவறு இருப்பதாக விஷால் தனது சக நடிகர்களும் களமிறங்கினார். பாண்டவர் அணி இவர்களுக்கு பெயர் கூட வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் வாக்கு சேகரிப்பது போல பட்டி தொட்டி எங்கும் இருக்கும் நாடக நடிகர்களிடம் இரு தரப்பும் வரிந்து கட்டிக்கொண்டு வாக்கு சேகரித்தது.

sarathkumar-case
sarathkumar

பலகட்ட பரபரப்புக்கு பிறகு சரத்குமாரின் அணியை விஷாலின் பாண்டவர் அணி வென்றது. இதை தொடர்ந்து, நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவிலும் எதிரணியினரை அழைக்கவில்லை. விஷால் மற்றும் ராதா ரவி ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, இரு தரப்புக்கும் இன்னும் சண்டை ஓயாமல் புகைந்து கொண்டே தான் இருக்கிறது.

சரத்குமார் எவ்வளவு எதிரியாக கருதுகிறாரோ அதே அளவு வரலட்சுமியுடன் நட்பு பாராட்டிக் கொண்டு இருக்கிறார் விஷால். சிறுவயது நண்பர்களான இவர்கள் கோலிவுட்டில் கால் பதித்ததில் இருந்து காதல் என கிசுகிசுக்கள் றெக்கை கட்டியது. இருந்தும், இதற்கு எந்த விதமான சரியான விளக்கமும் இரு தரப்பில் இருந்தும் வெளிவரவில்லை.

ஆனால், தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் சில காதல் செல்பிக்களை வெளியிட்டு வதந்’தீ’ யை அணையாமல் பார்த்து கொண்டனர். சமீபத்தில், மிஸ்டர் சந்திரமௌலி இசை வெளியீட்டு விழாவில், ஆர்யாவை எல்லாரும் கலாய்க்க வரலட்சுமி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என பதில் தருவார். அதற்கு, நிகழ்ச்சி தொகுப்பாளர் விஷால் சார் பார்த்துக்கோங்க என கமெண்ட் அடிக்க அரங்கமே சிரிப்பலையால் நிறைந்தது.

vishal
vishal

இந்நிலையில், ஒரு பேட்டியில் சரத்குமாரிடன் என்ன பிடிக்கும் என விஷாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விஷால் அவரின் ஃபிட்னெஸ் ரொம்ப பிடிக்கும். அதை விட, அவர் வரலட்சுமி அப்பா என்பதால் பிடிக்கும் எனத் தெரிவித்து இருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.