fbpx
Connect with us

Cinemapettai

அரை ட்ரவுசரில் அட்டகாசம் செய்யும் வரலட்சுமி! குதூகலத்தில் CSK ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரை ட்ரவுசரில் அட்டகாசம் செய்யும் வரலட்சுமி! குதூகலத்தில் CSK ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் மகளாக வரலட்சுமி, 2012 ஆம் ஆண்டு சிலம்பரசனுடன் ‘போடா போடி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார்.

இந்தப் படத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவருடைய கம்பீரமானதோற்றத்திலும், குரல் வளத்தாலுமே இவருக்கு சாதுவான கதாபாத்திரம் அமையவில்லை.

அதையே இவர் தனது பிளஸ் ஆக எடுத்துக்கொண்டு, தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் நெகட்டிவ் ரோல்களில் தனது அசத்தலான நடிப்பைக் காட்டி மக்களை மிரள வைத்து வருகிறார்.

2018 ஆம் ஆண்டில் மட்டும் விஷாலின் சண்டக்கோழி, தளபதியின் சர்க்கார், தனுஷின் மாரி2 போன்ற படங்களில் வில்லியாக நடித்து பெரும் உச்சத்தை அடைந்தார்.

அதன்பின் எக்கச்சக்கமான படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2020 ஆண்டு வெளியான ‘டேனி’ படத்தில் ஒரு நாயுடன் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக தனது தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டிருப்பார்.

எப்பொழுதுமே கம்பீரமான தோற்றத்தில் காட்சி அளிக்கும் வரலட்சுமி தற்போது க்யூட்டான குட்டி ட்ரவுசரில் அஞ்சலி பாப்பாவாக மாறியுள்ள தனது போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோவில் வரலட்சுமி, ரொம்பவே சாதுவான குட்டி பிள்ளை போல போஸ் கொடுப்பதால் ரசிகர்கள் வரலட்சுமியை, செல்லமாக கொஞ்சி வருகின்றனர்.

varalaxmi

varalaxmi

Continue Reading
To Top