Tamil Cinema News | சினிமா செய்திகள்
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த பிரபல தயாரிப்பாளர்.. கோலிவுட்டில் பீதியை கிளப்பிய வரலட்சுமி
சினிமாவை பொருத்தவரை நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் தர வேண்டுமென்றால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோருடன் அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என பலர் மீடூ புகாரில் கூறியதை அடுத்து தமிழ் சினிமாவின் வாரிசு நடிகை கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல முன்னாள் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் வரலட்சுமி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை பற்றி புகார் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வரலட்சுமி சரத்குமார் சிம்பு நடிப்பில் வெளியான போடாபோடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் சர்கார் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி2 படத்திலும் வில்லியாக நடித்தார்.
இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் தன்னை பட வாய்ப்புக்காக பிரபல நடிகரின் மகள் மற்றும் சினிமாவை சேர்ந்தவள் என்பதெல்லாம் தெரிந்தும் படுக்கைக்கு அழைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தும் எனவும், இது போன்று பல வாய்ப்புகளை தான் இழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சினிமாவுக்கு வரும் பெண்கள் யாரும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தைரியத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார்.
