Connect with us
Cinemapettai

Cinemapettai

வரிசை கட்டி அடிக்க போகும் வரலட்சுமி சரத்குமார் படங்களின் லிஸ்ட்.. 2021ல் இவங்க ராஜ்ஜியம் தான்

varalaxmi-sarathkumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வரிசை கட்டி அடிக்க போகும் வரலட்சுமி சரத்குமார் படங்களின் லிஸ்ட்.. 2021ல் இவங்க ராஜ்ஜியம் தான்

தமிழ் சினிமாவில் வரலட்சுமி சரத்குமார் போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அறிமுகமான முதல் படத்திலேயே தனது வெற்றியும் கண்டார். அதன் பிறகு சினிமாவில் பல கதாபாத்திரங்களில் தோன்ற ஆரம்பித்தார்.

இவரது திரை வாழ்க்கையில் நடிப்பிற்காக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது தாரை தப்பட்டை திரைப்படம் தான். இப்படம் பாலா இயக்கிய படமாக இருந்தாலும் வரலட்சுமியின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பிறமொழிப் படங்களிலும் தனது தனித்திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இப்போது தெலுங்கில் கூட இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

என்னதான் இருந்தாலும் வரலட்சுமி பிற மொழியில் 1, 2 படங்கள் மட்டுமே கைவசம் வைத்துள்ளார் ஆனால் தமிழில் மற்ற நடிகைகள் பொறாமை படும் அளவிற்கு ஏகப்பட்ட படங்கள் வெளிவர உள்ளன அதுமட்டுமில்லாமல் புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதோ அவர் நடித்துவரும் படங்கள்,

  • காட்டேரி
  • பாம்பன்
  • சேசிங்
  • பிறந்தநாள் பராசக்தி
  • கலர்ஸ்
  • அம்மாயி
  • சக்தி
  • கண்ணாமூச்சி
  • ரங்கோன் ரவுடி
  • நாந்தி

ஒருவேளை இந்த படங்கள் வரும் ஆண்டில் வெளிவந்தால் தொடக்கத்தில் நாட்டிலேயே அதிக படங்கள் வைத்திருந்த நடிகைகளில் இவர் முதல் இடத்தை பிடிப்பார் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

vara-laxmi

vara-laxmi

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top