Tamil Cinema News | சினிமா செய்திகள்
மார்பகத்தை பற்றி ரகசியம் காக்க வேண்டிய அவசியம் இல்லை.. வரலட்சுமி சரத்குமார்
பெண்கள் மார்பகங்களை மறைக்க வேண்டிய அவசியமில்லை வெளிப்படையாகவே இருக்கலாம் என்று பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
அப்படி எதுக்கு சொன்னாங்க?
சமீபகாலமாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மார்பக பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசலாம். அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆண்களுக்கு எப்படி உடலுறுப்புகள் உள்ளதோ அதேபோல் பெண்களுக்கு மார்பகம் என்பது ஒரு உடல் உறுப்பு தான். அதற்காக அதனை பற்றிய பிரச்சனைகளை வெளியே சொல்லாமல் கூச்சப்பட்டு கொண்டிருந்தால் நல்லதல்ல.
ஆரம்பத்தில் அதனைப் பற்றிய கவனம் இல்லாததால் பிற்காலத்தில் ஏதேனும் மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதிக செலவு செய்து சிகிச்சை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டு வருகிறது. இதனால் வணிக ரீதியாக பின்தங்கியுள்ள குடும்பங்கள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஆகையால் மார்பகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது மாற்றம் வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான விளக்கத்தை தெளிவாக கேட்டறிய வேண்டும் என்று சமீபத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்த வரலட்சுமி சரத்குமார் கூறினார்.
