Tamil Cinema News | சினிமா செய்திகள்
உங்கள் எதிர்மறை எண்ணம் என்னை வலிமையாக்கியது.. வரலட்சுமி சரத்குமாரின் வைராக்கியம்
நடிகை வரலட்சுமி சரத்குமார் 25 படங்களில் குறுகிய காலத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்காக தன்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் , நடிகர்கள் , ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் வரலட்சுமி சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் இது ஒரு நீண்ட கடினமான பயணமாக இருந்துள்ளது. நல்ல விஷயங்களை அடைவது அவ்வளவு சுலபம் அல்ல என்பார்கள். என் விஷயத்தில் அது மிகவும் உண்மை. ஆனால் கண்டிப்பாக கனவுகள் ஒரு நாள் நிஜமாகும்.
எனது சிறந்த திறனில் நான் வேலை செய்திருக்கிறேன். இந்த கட்டத்தை எட்ட நான் பல சவால்களை சந்தித்து உள்ளேன். இப்போது நான் 25 படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன் என்பதே பெரிய அளவு கோலாக எனக்கு தெரிகிறது.
என்ன நடந்தாலும் என்னுடன் நின்று என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என் பக்கம் நின்று என் ஊக்கத்தைத் தடுத்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் உங்கள் எதிர்மறை எண்ணம் தான் என்னை இன்னும் வலிமை ஆக்கியது.
உங்களை தவறென்று நிரூபிக்க இன்னும் பிடிவாதமாக நிற்க என்னை வைத்தது. என்னை ஆதரித்து அன்பு காட்டிய ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. என குறிப்பிட்டுள்ளார்.

varalaxmi
