
தமிழ் நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார். கடந்த சில வருடங்களாக ஹீரோயினாக நடித்து வருகிறார். மற்ற வாரிசு நடிகைகளைப் போலவே இவருக்கும் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவருக்கும் மற்ற நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மற்ற நடிகைகள் ஹீரோயினாக தான் நடிப்பேன் என சில நாட்கள் நடித்து விட்டு பல நாட்கள் மார்க்கெட் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
ஆனால் வரலட்சுமி சரத்குமார் ஹீரோயினாகவும், குணச்சித்திர நடிகையாகவும் அதே நேரத்தில் வில்லி கதாபாத்திரம் கிடைத்தாலும் தன்னுடைய நடிப்புத் திறனைக் காட்டி அனைவரிடமும் கைதட்டு வாங்கி விடுகிறார்.
அதுமட்டுமில்லாமல் தமிழை விட தற்போது தெலுங்கில் இவருக்கு மவுசு கூடி வருகிறது. தெலுங்கில் வில்லியாகவும் நாயகியாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான கிராக் திரைப்படத்தில் கூட இவரது நடிப்பு பேசப்பட்டது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இறுக்கி அணைத்து கட்டிப்பிடித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளில் பாவம் அவருக்கு மூச்சுமுட்டி விடப் போகிறது என கிண்டலடித்து வருகின்றனர். சந்தீப் கிஷன் தமிழில் யாருடா மகேஷ், மாநகரம் போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
