இப்படி ஒரு கதை தேர்வு செய்ய நெஞ்சு தைரியம் ஜாஸ்தியா வேணும்.. வரலாறு முக்கியம் எப்படி இருக்கு.? விமர்சனம்

காலம் காலமாக குடும்ப ஆடியன்ஸை கவரும் வகையில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து வரும் ஆர்பி சவுத்ரி தன் மகன் ஜீவாவை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். சமீப காலமாக ஜீவாவின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. ஆனாலும் எப்படியும் ஒரு வெற்றியை கொடுப்பேன் என்ற வைராக்கியத்துடன் அவர் வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ஜீவா உடன் இணைந்து விடிவி கணேஷ், பிரக்யா நக்ரா, காஷ்மீரா பர்தேஷி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கதைப்படி யூடியூப் சேனல் வைத்திருக்கும் ஜீவா காஷ்மீராவை காதலிக்கிறார். ஆனால் அவருடைய தங்கை பிரக்யா, ஜீவாவை காதலிக்கிறார். இதற்கிடையில் துபாய் மாப்பிள்ளைக்கு தான் தன் பெண்களை திருமணம் செய்து வைப்பேன் என்று ஹீரோயின்களின் அப்பா பிடிவாதமாக இருக்கிறார்.

Also read: தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்ட 6 நடிகர்கள்.. சாக்லேட் முகத்தால் பரிதவிக்கும் ஜீவா

அவர் மனம் மாறினாரா, ஜீவா தன் காதலியை திருமணம் செய்தாரா என்பது தான் இந்த படத்தின் கதை. ஹீரோ பேருக்குத்தான் சேனல் வைத்து நடத்துகிறேன் என்று சொன்னாலும் படத்தில் ஒரு இடத்தில் கூட அவர் அதற்கான வேலையை பார்க்கவில்லை. அதற்கு மாறாக தெருத்தெருவாக சுற்றுவதும், ஹீரோயின் பின்னால் அலைவதையுமே வேலையாக வைத்திருக்கிறார்.

அவருடைய நண்பராக வரும் விடிவி கணேஷ் படம் முழுக்க பயணிக்கிறார். சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட பல திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஜீவா இப்படி ஒரு கதையை தேர்வு செய்ததற்கு ரொம்பவும் தைரியம் வேண்டும். ஏனென்றால் படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்களும், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் ஏராளமாக ஆக்கிரமித்து இருக்கிறது. அதனாலேயே இந்த படத்தை குடும்ப ஆடியன்ஸால் நிச்சயம் பார்க்க முடியாது.

Also read: ஜீவா வளர்ச்சியை கெடுத்த 5 படங்கள்.. அதல பாதாளத்திற்குச் சென்ற மார்க்கெட்

அந்த வகையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இப்படி ஒரு படத்தை தயாரித்தது பெரும் புதிராக இருக்கிறது. ஒருவேளை இந்த நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிக்க இருப்பதால் எண்ணிக்கைக்காக இது போன்ற மொக்கை படங்களை தயாரித்து வருகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஜீவாவிற்கு இந்த படம் நிச்சயம் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏற்கனவே இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த காபி வித் காதல் திரைப்படம் பலான படம் ரேஞ்சுக்கு விமர்சிக்கப்பட்டது. தற்போது இந்த திரைப்படமும் அதே மாதிரி ஒரு உணர்வைத் தான் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது. ஆதிகால கதையை ஏதோ புது கதை ரேஞ்சுக்கு படமாக எடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படம் ஓடாது என்று தெரிந்தும் வெளியான படங்களின் லிஸ்டில் இணைந்திருக்கிறது.

Also read: படத்தில் கல்லா கட்ட முடியாமல் ரூட்டை மாற்றிய ஜீவா.. இதுலயாவது நல்ல நேரம் வரட்டும்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்