வரலக்ஷ்மி சரத்குமார்
நம் சரத்குமாரின் மகள். போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். இவரின் மிரட்டல் நடிப்பில் சண்டக்கோழி 2 , சர்கார், மாரி 2 என்று வரிசையாக ரிலீஸ் ஆகி வருகின்றது. மேலும் நீயா 2, வெல்வெட் நகரம் , சக்தி, டேனி என லிஸ்ட் நீண்டு கொண்டே uசெல்கிறது.
டேனி
மார்ச் 5 இவரின் பிறந்தநாள். அதனை முன்னிட்டு இவருக்கு “மக்கள் செல்வி” என்ற அடைமொழியும் வைத்து ஐந்து போஸ்டர்களையும் வெளியிட்டுள்ள்ளனர் படக்குழு.

பி.ஜி.முத்தையா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலக்ஷ்மி நடித்திருக்கும் படம் `டேனி’. படத்தில் வரலட்சுமி போலீஸாக நடிக்கிறார். வேல.ராமமூர்த்தி, யோகி பாபு, அனிதா சம்பத் மற்றும் ஒரு நாயும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
நாயின் உதவியுடன் எவ்வாறு தொடர் கொலை செய்ய்பவர்களை மக்கள் செல்வி கண்டுபிடிக்கிறார் என்பதே இந்த திரில்லர் படத்தின் கதையாம்.
