Tamil Cinema News | சினிமா செய்திகள்
13 வயதில் 5 பேரால் பாலியல் கொடுமை நடந்தது.! வரலக்ஷ்மி பகீர் வாக்குமூலம்.!
பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இளம் வயதில் தனக்கு நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இவர் பேசியதை பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சர்கார், சண்டக்கோழி 2, ஆகிய படங்களில் பிசியாக நடித்து வந்தவர் வரலட்சுமி சரத்குமார் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் டாக் ஷோ ஒன்றை நடத்தி வருகிறார், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் “உன்னை அறிந்தால்” இந்த நிகழ்ச்சியில் வாரம்தோறும் சமூகத்தில் நடக்கும் அநியாயங்கள் பற்றி விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
நேற்று 12 மணிக்கு வெளியான அதன் முதல் எபிசோடில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் அதற்கான தீர்வுகள் ஆகியவை விவாதிக்கப்பட்டன, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பலர் கூறுகையில் தெருவில் நிற்க வைத்து தரும் தண்டனையை மற்றவர்களுக்கு பயத்தை உண்டாக்கும் என கருத்து தெரிவித்தார்கள் சிலர் அவர்களை தெருவில் நிற்க வைத்து அவர்கள் ஆண்குறி மீது ஆசிட் அடிக்க வேண்டும் என தெரிவித்தார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சி முடிவில் தான் ஏன் இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புக் கொண்டேன் என்றால் நானே பாலியல் தொல்லைக்கு ஆளான குழந்தைதான் என்னுடைய 13 வயதில் ஒரு டிரைவர் 2 மேனேஜர்கள் அவர் ஒரு செக்ரட்டரி மற்றும் ஒரு தாத்தா ஆகியோரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என கூறினார் இது பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.
