சிபிராஜின் ‘சத்யா’ திரைப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டி. பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது. இதில்  சிபிராஜ்,  ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி, இசையமைப்பாளர் சைமன் கிங் மற்றும் சிறப்பு விருந்தினராக “ஷணம்” (தெலுங்கு) திரைப்படத்தின் கதாநாயகன் அதிவிசேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது பத்திரிகையாளர்களிடம் வரலட்சுமி சரத்குமார் ” சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர், தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி. இந்த வருடம் நான் நடித்த இரண்டு படங்கள் விக்ரம் வேதா, சத்யா  இரண்டும் நல்ல ஹிட் ஆனது மகிழ்ச்சியாக உள்ளது. நான் நம்ப ஸ்டேட் CM தானே பார்க்க போனேன். அதை ஏன் பெரிது படுத்துகின்றீர்கள். சேவ் சக்தி அமைப்பு விஷயமாக தான் நான் முதல்வரை சந்தித்தேன். நாங்கள் அமைப்பு மூலமாக என்ன செய்கிறோம் என்று விளக்கினேன்.

நான் திமுக, அதிமுக எந்த காட்சியிலும் சேரவில்லை. நான்  அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன். என்னுடைய தந்தையின் பார்டியில் கூட நான் உறுப்பினர் கிடையாது . நான் இப்போதைக்கு சத்யா சக்சஸ் பார்டியில் தான் உள்ளேன்.” என்றார் .