Connect with us
Cinemapettai

Cinemapettai

varalakshmi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஏற்கனவே என்ன படுத்துறாங்க, இதுல இது வேற.. நொந்து போன வரலட்சுமி

வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்த டேனி படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி jee5 வென்ற OTT தளத்தில் வெளியாக உள்ளது. அந்த படத்தின் பிரமோஷனுக்காக பல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அதேபோல் சினிமாவில் சம்பள குறைப்பு சம்பந்தமாகவும் வரலட்சுமியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏன்டா இந்த கேள்விய கேட்ட எனும் அளவுக்கு வருத்தப்பட்டு நொந்து போய் விட்டாராம் வரலட்சுமி.

வரலட்சுமி நடிக்கும் படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இல்லையென்றால் வில்லியாக வாய்ப்பு கொடுத்து விடுகிறார்கள்.

ஒரு ஹீரோயினாக மதிக்கவே மாட்டிங்களா என புலம்பும் அளவுக்கு தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்து வருகின்றன. இதனால் சம்பளமும் குறைவு தான்.

இதனால் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் விதமாக வரலட்சுமி இடம் நீங்கள் எவ்வளவு சம்பளம் குறைத்து இருக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் ஏற்கனவே நான் குறைவாகத்தான் வாங்குகிறேன் எனவும், அதனால் குறைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்து விட்டார்.

Continue Reading
To Top