Tamil Cinema News | சினிமா செய்திகள்
வரலக்ஷ்மியின் அரசியல் வரவு! நிலை தடுமாறும் சரத்குமார்.
நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது புதுசு இல்லை. ஆனால் ஆரம்பித்த கட்சியை தொடர்ந்து நடத்துவதே பெரிய சாதனை. சரத்குமார் பெற்ற வெற்றி குறைவு என்றாலும் அவர் இப்போதுவரை கட்சியை நடத்துவதே பெரிய விஷயம். அதுவும் பெரிய கட்சியுடன் பெரிய பெரிய கூட்டணி. இப்பொழுது சரத் கட்சியில் அவரது மகள் வரலக்ஷ்மி வர பெரிய வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் வரலக்ஷ்மியின் செயல்பாடுகளும் அதுக்கு ஆமாம் சொல்வது போன்றுதான் உள்ளது. அவர் தனது பிறந்த நாளை சர்வதேச பெண்கள் தினத்தோடு பல திட்ட உதவிகளோடு சேர்த்து கொண்டாட உள்ளனர்.
இதற்கு காரணம் விஷால் கூட இருக்கலாம். அவர்தான் சரத்குமாரிடம் சண்ட போட்டு இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்திலும் போட்டி போட்டு வெற்றிபெற்று, அதிலும் உச்சகட்டமாக ஆர் கே நகர் தேர்தலிலும் நிற்க சென்று விட்டார். கொஞ்சம் விட்டால் சரத்குமாரை வணக்கம் சொல்ல வைத்து விடுவார் போல. இதற்கு மேல் தாங்காது என குஷ்பு, நக்மா, தமிழிசை, போன்ற அரசியலில் சுமார் பெயரோடு உள்ள நடிகைகள் மாதிரி இவரும் கொஞ்ச நாளில் கிளம்பி விட வாய்ப்பிருக்கிறது.
இதனால் அவரிடமே ‘என்ன மேடம் அரசியல் என்ட்ரி ஆரம்பமா’ என நிருபர்கள் கேள்விக்கு. அரசியல் என்ன அவளோ பெரிய கெட்டவார்த்தையா ? யாரையும் தோற்கடிக்க வரவில்லை, நல்லது பண்ற நோக்கம் இருந்தால் யார் வேண்டுமானாலும் வரலாம் என் கூறினார். மேலும் இப்ப கொஞ்சம் வேலை இருக்கு அதனால வர முடியாது ஆனால் கண்டிப்பாக எதிர்காலத்தில் வருவேன்’ என பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்..
தமிழ்நாட்டு நலன் மேல் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், கார்த்திக், சரத்குமார், விஷால், குஷ்பு, நக்மா, வரலக்ஷ்மி இன்னும் பலபேர், இவளோ நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டுவது நல்லதாக இருந்தாலும். தனது சொத்தில் அனைத்தையும் வைத்து மக்களுக்கு நல்லது செய்துவிட்டு சேவை செய்வதாக மட்டும் வந்தால் அவர்களின் வெற்றியும் தானாக வர போகிறது. இவை எல்லாத்துக்கும் இந்தியாவே எதிர்பார்க்கும் வரபோகிற தமிழ்நாடு தேர்தல் பதில் சொல்லும்.
