வரலட்சுமி சரத்குமார், ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் மூலம் அறிமுகமானார், பின்பு நடித்த தாரை தப்பட்டை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது , படத்தின் வித்தியாசமான கேரக்டர் மூலம் ரசிகர்களின் கூட்டத்தை பெற்றார். இப்பொழுது ஒரு மாறுப்பட்ட வேடத்தில் நடித்துவருகிறார்.

இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும், இந்த படத்தில் இசை அமைப்பாளராக சாம்.சி, ஒளிப்பதிவாளராக பாலாஜி ரங்கா முதலானோர் பணியாற்றவிருக்கிறார்கள் என்றும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவிருக்கிறது என்ற தகவலையும் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ‘சக்தி’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

‘அபேரட்டல் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் சரண்யா லூயிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற ஒரு தகவல் கிடைக்க, அதை உறுதிப்படுத்துவதற்காக நாம் வரலட்சுமி சரத்குமாரை தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது ‘சக்தி’யில் ‘காப்’பாக நடிப்பதை அவர் உறுதி செய்தார். மேலும் இப்படம் குறித்து வரலட்சுமி பேசும்போது, ‘‘போலீஸுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கிற ஒரு கேம் தான் படம். அதை சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பில் ஒரு த்ரில்லர் படமாக தரவிருக்கிறார் இயக்குனர்’’ என்றார்.

2018 மார்ச் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, ஒரு பெண் இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக பூஜா என்ற மற்றொரு பெண் அறிமுகமாகவிருக்கிறார்.

அவர் வேறுயாருமல்ல, சரத்குமாரின் மகளும் வரலட்சுமி சரத்குமாரின் சகோதரியும் ஆவார். ‘சக்தி’யின் கலை இயக்கத்தை ராமலிங்கம் கவனிக்க, படத்தொகுப்பை இளையராஜா கவனிக்கிறார். ஸ்டண்ட் இயக்கத்தை திலீப் சுப்பராயன் கவனிக்கிறார். பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதுகிறார்.

இந்த படம் இவருக்கு நல்ல திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here