Tamil Cinema News | சினிமா செய்திகள்
உலகத்திலேயே மிகக் கொடூரமான நாயுடன் கட்டி பிடித்து முத்தம் கொடுத்த வரலட்சுமி.. உங்களுக்கு தில்லு ஜாஸ்தி தான்!
வரலட்சுமி சரத்குமார் 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து அங்கும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இவரது திரைப்பட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என்றால் தாரை தப்பட்டை தான். இந்த படத்தில் இவரது நடிப்பு பார்த்து தேசியவிருது வாங்குவதற்கும் வாய்ப்புள்ளது என பலரும் கூறினர். ஆனால் எதிர்பார்த்த மாதிரி அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இவரது நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

varalaxmi
தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த வரலட்சுமிக்கு விஜய் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகிடைத்து சர்க்கார் படத்தில் நடித்தார். அதன்பிறகு மாரி 2 ,நீயா 2 ,டேனி போன்ற பல படங்களில் நடித்தார்.

varalaxmi
தற்போது வரலட்சுமி அவரது சமூக வலைதள பக்கத்தில் உலகத்திலேயே மிகக் கொடூரமான நாயை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் செம கியூட், பியூட்டி கேல், டேஞ்சரஸ் டாக் மற்றும் உங்களுக்கு தில்லு ஜாஸ்தி தான் என பதிவிட்டுள்ளனர்.

varalakshmi
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
