Connect with us
Cinemapettai

Cinemapettai

அஜித்தை அப்படியே பின்பற்றும் வரலட்சுமி.. கைவசம் வரிசை கட்டி நிற்கும் 9 படங்கள்

ajith-varalaxmi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தை அப்படியே பின்பற்றும் வரலட்சுமி.. கைவசம் வரிசை கட்டி நிற்கும் 9 படங்கள்

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் கதாநாயகியாக அறிமுகமானாலும், தன்னுடைய பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்ந்து, முன்னணி நடிகையாக மாறியவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதித்தார்.

மேலும் கெத்தான கதாபாத்திரங்கள், தைரியமான காட்சிகள் என துணிச்சலான படங்களை தேர்வு செய்து நடிப்பதால்,வரலட்சுமிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது வரலட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒன்பது படங்களில் கமிட்டாகி மற்ற நடிகைகளை மிரள விட்டிருக்கிறார். இந்தத் தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

மேலும் வரலட்சுமி கமிட்டாகி உள்ள படங்களின் லிஸ்ட் இதோ:

  • காட்டேரி – தமிழ்
  • பாம்பன்- தமிழ்
  • பிறந்தநாள் பராசக்தி- தமிழ்
  • கலர்ஸ்- தமிழ்
  • யானை – தமிழ்
  • சேஸிங்- தமிழ்
  • நந்தி- தெலுங்கு
  • கிராக்- தெலுங்கு
  • ரணம்- கன்னடம்
varalaxmi-sarathkumar

varalaxmi-sarathkumar

இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, மற்ற நடிகைகளை பொறாமைப்பட வைத்துள்ளதாம்.

அஜித் எப்போதுமே சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடுவதில்லை, அதேபோல் வரலட்சுமி சரத்குமாரும் கடினமான சண்டைக் காட்சிகளில் கூட டூப் போடுவது இல்லையாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top