ஐபிஎஸ் அதிகாரியாக களத்தில் குதித்த வரலட்சுமி.. எந்த படத்திற்காக தெரியுமா?

Varalakshmi: சமீபத்தில் வரலட்சுமி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சர்கார், மாரி 2 இந்த இரண்டு திரைப்படத்திலும் இவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சர்கார் படத்தில் அரசியல்வாதியின் மகளாகவும், மாரி 2 படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார். தற்போது அதை தொடர்ந்து ராஜபார்வை எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இதனை வரலட்சுமி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில் காக்கிச்சட்டை உடையணிந்து இடது தோள்பட்டையில் ஐபிஎஸ் என எழுதப்பட்டிருக்கிறது.

மேலும் வரலட்சுமி எனக்கு இன்னொரு வாழ்க்கை இருந்தால் நிச்சயம் நான் போலீஸ் அதிகாரியாக தான் இருந்திருப்பேன். மேலும் எனது வேலையை நான் நேசிக்கிறேன் எனக்கு பல்வேறு கதாபாத்திரங்கள் தரும் இயக்குனர்களுக்கு நன்றி என கூறியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்ளும் ரசிகர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Leave a Comment