fbpx
Connect with us

Cinemapettai

எனக்கு கிட்னி கெட்டு போனாலும் அந்த பழக்கத்தை நிறுத்த மாட்டேன்.. ஷாக் கொடுத்த வரலட்சுமி

varalakshmi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எனக்கு கிட்னி கெட்டு போனாலும் அந்த பழக்கத்தை நிறுத்த மாட்டேன்.. ஷாக் கொடுத்த வரலட்சுமி

தமிழ் சினிமாவில் அடாவடி பொண்ணு என்றால் அது வரலட்சுமி சரத்குமார். எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக பேசக்கூடிய பெண். அதனாலேயே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். சமீபகாலமாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

சர்கார் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லியாக நடித்து விருதுகளை குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்று வரலட்சுமியும் அவரது தந்தை சரத்குமாரும் கலந்து கொண்டனர்.

இதில் சரத்குமார் சைவத்துக்கு மாறி ரொம்ப நாள் ஆகிவிட்டதாகவும், மகள் வரலட்சுமியை சைவத்திற்கு மாறும்வரை பல தடவை சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார் என புலம்பி தள்ளினார். அதற்கு வரலட்சுமி அசைவம் சாப்பிடுவதால் என்னுடைய உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்றாலும் பரவாயில்லை, அசைவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என கூறிவிட்டார்.

வரலட்சுமி நடிப்பில் வெல்வெட் நகரம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பல படங்கள் தொடர்ந்து ரிலீசுக்கு காத்துக்கொண்டு உள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top