Tamil Cinema News | சினிமா செய்திகள்
வந்தா ராஜவாதான் வருவேன்.. சிம்புவின் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள்
நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் ஏனென்றால் சிம்பு பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர், தற்பொழுது அனைத்தையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார். இருந்தாலும் இந்த மீடியா விடுவதாக இல்லை. ஏன் என்றால் சில விஷயங்களில் சிம்புவின் குரல் கண்டிப்பாக பெரிதாக எதிரொலிக்கும். காவிரி பிரச்சனைக்கே அவர் குடுத்த குரல் கர்நாடகா வரை சென்றது. அவரது ரசிகர்களும் கர்நாடகாவில் ஒரு டம்ப்ளரில் தண்ணீர் வைத்துகொண்டு வெளியில் நின்றது பெரும் அளவில் ரீச் ஆனது.
அதேபோல் சிம்பு ரசிகர்கள் ‘எத்தனை சர்ச்சைகளை சந்தித்தாலும் சிம்புவை கைவிடாமல் பக்கபலமாக இருக்கிறார்கள்’, சமீபத்தில் சிம்புவின் செக்கச் சிவந்த வானம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது, அடுத்ததாக வந்த ராஜாவாக தான் வருவேன் என்ற படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்கள். அதுவும் ரஜினி, அஜித்திடம் போட்டி போட்டு வருகிறார். இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் யார் படமாக இருந்தாலும் ஓடும்.
அடுத்தடுத்து சிம்புவின் பல படங்கள் வெற்றியாக அமைந்து வருகிறது. சிம்பு தற்போது வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் இருக்கிறார். சிம்புவின் நெருங்கிய நண்பர் மகத் என்பதை அனைவருக்கும் தெரியும், இவர் சிம்புவுடன் ஒருநாள் லைவ்வில் வருவேன் என கூறியிருந்தார் அது எப்போது என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நேரத்தில் மகத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவின் வருகையை தெரிவித்து நீங்கள் தயாரா என கேட்டுள்ளார்.

simbu
கண்டிப்பாக ரசிகர்கள் அரசியல் மற்றும் கஜா புயல் பற்றி கேள்வி கேட்பார்கள். அதற்கு சிம்பு என்ன பதில் சொல்ல போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவரின் பதிலை வைத்துதான் நிறைய செய்திகள் வெளிவர இருக்கிறது. ஆனால் ஒன்று பல நடிகர்கள் பயந்தோ அல்லது நமக்கு ஏன் இந்த வம்பு என இருக்கையில் சிம்பு தைரியமாக பதில் கூறுவது அவரது அப்பா டி.ஆர் பாணியை காமிக்கிறது.
