Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்
சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் சினிமா துறையில் இருந்து அப்படத்திற்கு ரெட் Alert கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். சினிமா துறையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த சிம்பு தனது ரசிகர்களுக்காக நிறைய மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கோபத்தில் சிம்பு ரசிகர்கள் விஷாலை பற்றி விமர்சித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் விஷால் வெளியூர்களில் இருப்பதாகவும் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

simbu-vrv
‘AAA’ படத்தில் உள்ள பிரச்சனைகளை முடித்துவிட்டு பின்னர் இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். மைக்கல் ராயப்பன் பிரச்சனையை முடிக்காததால் இப்படத்திற்கு ரெட் Alert கொடுக்கப்பட்டுள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைப் பற்றிப் சுமூகமாக பேசுவதற்கு நேராக சிம்பு சென்றபின் மீண்டும் இதற்கு ரெட் Alert போடுவதற்கான காரணம் என்ன என்று சிம்பு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதனால் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு வருவது சந்தேகம்தான். பின்னர் கூறியதுபோல் பேட்ட படம் பொங்கலுக்கு வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். ‘செக்க சிவந்த வானம்’ படத்திற்கு பின்னர் மிக எதிர்பார்ப்புடன் இருக்கும் படம் என்பதால் விரைவில் ஒரு நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அஜித் படம் வெளிவருவதால் அடுத்தடுத்து படங்கள் நிற்கின்றன. இதை பார்த்தால் விஸ்வாசம் படத்திற்காக அனைத்து படங்களும் நிற்கின்றன என்கின்றனர் ஒரு குழுவினர்.
சிம்புவின் ரசிகர்கள் சந்தோஷப்படுத்தும் அடுத்த செய்தி பொறுத்திருங்கள்!
