Tamil Cinema News | சினிமா செய்திகள்
வந்தா ராஜாவாகத்தான் வருவேன் முதல் பாடலிலேயே சர்ச்சை வரிகள்.! இதோ சிம்புவே பாடிய பாடல்.!
சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் செக்கச் சிவந்த வானம் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலும் அள்ளியது சிம்பு அடுத்ததாக வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார், படத்தை பிரமாண்டமாக லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது, மேலும் சிம்புவின் இந்த படத்தை வருகிற பொங்கலுக்கு, ரஜினியின் பேட்ட , அஜித்தின் விசுவாசம் ஆகிய படங்களுடன் மோத இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று வெளியாகிய வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தின் டீசர் ப்ரோமோ வீடியோ சில மணி நேரங்களிலேயே, ட்ரெண்டாகி யூட்யூபில் மூன்றாவது இடத்தை பிடித்தது.
இந்நிலையில் சிம்பு ஒரு வீடியோவில் ஒரு பாடலை பாடி இது நான் எழுதினது கிடையாது இந்த படத்தின் பாடல் என கூறினார் அதுவும் அந்த பாடலை பாடியும் காட்டினார் அவர் பாடியதாவது “ எனக்கா ரெட் கார்டு…. எடுத்து பாரு என் ரெக்கார்டு” எனப் பாடினார் இது இந்த படத்தின் ஓப்பனிங் சாங் என தெரிகிறது, இதை தற்போது சிம்பு ரசிகர்கள் ட்ரென்ட் ஆக்கி வருகிறார்கள்.
