Connect with us
Cinemapettai

Cinemapettai

nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு போட்டியாக ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் வனிதா.. ஜோடி யாரு தெரியுமா?

சினிமாவை பொருத்தவரை நயன்தாரா மற்றும் வனிதா ஆகிய இருவரும் சினிமாவை தாண்டி மற்ற விஷயங்களில் ஒரே மாதிரிதான். வனிதா கல்யாணம் செய்து விவாகரத்து செய்து வந்தால், நயன்தாரா காதலித்து கழட்டி விட்டு வருகிறார்.

சரி, இது ஊருக்கே தெரிந்த விஷயம் தானே. இந்நிலையில் சினிமாவிலும் நயன்தாராவை ஓரம் கட்டி விட வேண்டும் என வனிதா தற்போது ஹீரோயினாக மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

வனிதா ஆரம்ப காலகட்டங்களில் தளபதி விஜய் ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ராஜ்கிரண் ஜோடியாக மாணிக்கம் என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பெரிய அளவு சினிமாவில் இல்லை என்றாலும் அவ்வப்போது தலைகாட்டி வந்தார்.

vanitha-nayanthara-cinemapettai

vanitha-nayanthara-cinemapettai

இந்நிலையில் பிக்பாஸ், குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான வனிதா தற்போது மீண்டும் ஹீரோயினாக அவதாரம் எடுக்க உள்ளாராம். இந்த படத்தை கீர்த்தி சுரேஷ் நடித்த பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆடம் தாசன் என்பவர் இயக்க உள்ளாராம்.

மேலும் வனிதாவுக்கு ஜோடியாக காமெடி நடிகர் கருணாகரன் நடிக்க உள்ளாராம். இந்த படத்திற்கு அனல் காற்று என பெயர் வைத்துள்ளார்களாம். படம் முழுக்க பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாம்.

இந்த படத்திற்கு பிறகு சோலோ ஹீரோயின்களாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜோதிகா மற்றும் நயன்தாராவுக்கு பிறகு வனிதா தான் என மக்கள் பேசுவார்கள் என்று தன்னுடைய வட்டாரங்களில் வனிதா பெருமையாக தெரிவித்துக் கொள்கிறோம்.

Continue Reading
To Top