Tamil Cinema News | சினிமா செய்திகள்
லேடி சூப்பர் ஸ்டாராக மாறிய வனிதா! செஞ்ச வேலைக்கு டபுள் ஹாப்பியாம்..
தமிழ் சினிமாவில் விஜயகுமார்-மஞ்சுளா நட்சத்திர தம்பதிகளின் மூத்த மகளான வனிதா, விவாகரத்து ஆகாத பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு சமூகவலைதளங்களில் பேசும் பொருளாக மாறி விட்டார்.
அதன்பின் அந்த திருமணமும் நினைக்காததால் இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது வனிதா ரசிகர்களை வியப்பூட்டும் அளவுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பாணியை பின்பற்றி உள்ளார்.
அது என்னவென்றால், பிரபுதேவா-நயன்தாரா காதலித்தபோது, நயன்தாரா தனது கையில் பிரபு தேவாவின் பெயரை பச்சை குத்திக் கொண்டனர்.
அதன்பிறகு அவரிடம் ஏற்பட்ட காதல் முடிவினால் பிரபுதேவாவின் பெயரை மறைக்கும் அளவுக்கு வேறு ஒரு டாட்டூ குத்தியது போல, வனிதாவும் அவ்வாறே செய்துள்ளார்.
ஏனென்றால் பீட்டர் பால்-வனிதா காதலித்த போது பீட்டர் பால் வனிதா பெயரையும், வனிதா பீட்டர் பால் பெயரையும் கையில் பச்சைக் குத்திக் கொண்டனர். எனவே அந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் ரொம்பவே பிரபலமானது.

vanitha-peter-cinemapettai
ஆனால் ஒரு சில மாதங்களே சேர்ந்து வாழ்ந்த பீட்டர் பாலும் வனிதாவும், தற்போது பிரிந்து உள்ள நிலையில், வனிதா தனது கையில் பச்சை இருக்கும் பீட்டர் பாலின் பெயரை மறைக்கும் அளவுக்கு வேறு ஒரு சிம்பிளாக மாற்றி அமைத்துள்ளார்.
அந்த சிம்பிள்லுக்கு ‘டபுள் ஹேப்பினஸ்’ என்பது அர்த்தமாம். ஆகையால் வனிதா தனது டாட்டூவை மாற்றி அமைக்கும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருக்கிறார்.

vanitha-cinemapettai.jpg
அத்துடன், ‘இனிமேல் எந்த நாதாரி பெயரையும் எனது கையில் பச்சை குத்திக் கொள்ள மாட்டேன்’ என்று உறுதியளித்துள்ளார்.
