ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

ரஞ்சித் கொடுத்தது மருத்துவ முத்தமா.? பளிச்சுன்னு சொன்ன வனிதா

Bigg Boss Season 8 : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும், முத்த சர்ச்சைக்கும் எப்போதுமே பஞ்சம் இருக்காது. முதல் சீசனில் ஆரவ் மருத்துவம் முத்தம் என்ற ஓவியாவுக்கு முத்தம் கொடுத்து விளக்கம் கொடுத்திருந்தார். அதேபோல் தொடர்ந்து சில பிக் பாஸில் பல சர்ச்சைகள் பிடித்திருக்கிறது.

பெண்களிடம் தவறாக அணுகுகிறார் என பரணியை டார்கெட் செய்த நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டின் சுவர் ஏரி குதிக்கும் அளவுக்கு சென்று விட்டார். அதேபோல் பாடலாசிரியர் சினேகன் மீதும் பிக் பாஸ் வீட்டில் பெண்கள் சில அடுக்கடுக்கான குற்றங்களை வைத்தனர்.

இப்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் நேற்று ரஞ்சித் பிராங் செய்த நிலையில் அதில் உள்ள பெண் போட்டியாளர்களுக்கு முத்தம் கொடுத்திருந்தார். ஜாக்குலின் கன்னத்தை கிள்ளியும், சௌந்தர்யா நெற்றிலும் ரஞ்சித் முத்தம் கொடுத்தது சர்ச்சையாக பிடித்தது.

ரஞ்சித்துக்கு ஆதரவாக பேசிய வனிதா விஜயகுமார்

இது ஒரு வகையான மருத்துவ முத்தமா என பலரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை யூடியூபில் ரிவ்யூ கொடுத்து வருகிறார் வனிதா விஜயகுமார். அந்த வகையில் ரஞ்சித்தின் முத்தம் குறித்தும் பேசி இருந்தார்.

அதாவது சினிமாவில் ரஞ்சித் பல வருடங்களாக இருந்து வரும் நிலையில் இத்தனை கேமராவுக்கு முன் அவர்களுக்கு முத்தம் கொடுப்பதில் எந்த தப்பான நோக்கமும் இருக்க வாய்ப்பு இல்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் எல்லோரும் முன்னிலையிலும் கேவலமாக நடந்து கொள்ள மாட்டார்.

ஒரு சகோதரனாக நினைத்து தான் ரஞ்சித் முத்தம் கொடுத்திருப்பார். இந்த விஷயத்தில் ரஞ்சித்துக்கு தன்னுடைய முழு சப்போர்ட் என வனிதா கூறி இருக்கிறார். மேலும் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கி முதல் இரண்டு நாட்களிலேயே காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. ஆகையால் இந்த சீசன் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடக்க இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News