4 இல்ல 40 கல்யாணம் கூட பண்ணுவேன், உங்களுக்கு என்ன பிரச்சனை.. அதிரடி காட்டும் வனிதா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். செய்திகளில் இவர் பெயர் அடிபடாத நாட்களே இல்லை என்றும் கூறலாம். அந்த அளவிற்கு தினமும் ஏதாவது ஒரு சர்ச்சையில் கொண்டு வருகிறார்.

வனிதா விஜயகுமார் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மூன்றாவதாக பீட்டர் பால் என்பது திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்திவரும் வனிதா நடிகர் பவர் ஸ்டாருடன் மாலை மாற்றிக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

மேலும் நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் ஒரு தகவல் பரவியது. தற்போது வனிதா இது குறித்து விளக்கம் அளித்து உள்ள வனிதா, “ஆண்களுக்கு நான்கு, ஐந்து திருமணம் நடந்தால் கூட அதனை யாரும் கேட்பது இல்லை. ஆனால் பெண்கள் செய்தால் மட்டும் பேசுகின்றனர். நான் நான்கு அல்ல நாற்பது திருமணம் கூட செய்வேன். எதற்கும் அஞ்சமாட்டேன். எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் பகிர்வேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், பவர் ஸ்டார் சீனிவாசனுடன் திருமணம் செய்து கொண்டதுபோல் வெளியிட்டுள்ள புகைப்படம் திரைப்படத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் மட்டுமே வெளியிடப்பட்டது எனவும் வனிதா கூறியுள்ளார். வனிதாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

vanitha
vanitha
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்