Connect with us

Cinemapettai

வடிவேல் போல் கெத்தாக அருவா வைத்திருக்கும் வனிதா.. இணையத்தில் சூடு பிடித்த புகைப்படம்

vanitha vijayakumar vadivelu

Photos | புகைப்படங்கள்

வடிவேல் போல் கெத்தாக அருவா வைத்திருக்கும் வனிதா.. இணையத்தில் சூடு பிடித்த புகைப்படம்

வனிதா விஜயகுமார் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பல சர்ச்சைகள் தான். ஒருகாலத்தில் சர்ச்சை உடன் தான் வாழ்ந்து வந்தார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஏகப்பட்ட சர்ச்சைகள் சந்தித்துள்ளார். வனிதா ஒரு பெண்ணாக இவ்வளவு சர்ச்சை சந்தித்து இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் தற்போது வரை தைரியமாக வாழ்ந்து வருகிறார்.

சமீபகாலமாக ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி அவதூறாக பேசுவது தேவையில்லாத பற்றி கூறுவது என பலரும் பல்வேறு விதமான கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படித்தான் வனிதாவும் மாட்டிக்கொண்டார்.

தனது மகளுடன் தனியாக வசித்து வரும் வனிதா சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தற்போது இவருக்கு தைரியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதற்கு காரணம் இவர் வாழ்க்கையில் தைரியமாக இருப்பது தான்.

vanitha vijayakumar

vanitha vijayakumar

பாபி சிம்மா மற்றும் கீர்த்தி சுரேஷ் இவர்களை வைத்து பாம்பு சட்டை என்ற படத்தை இயக்கிய ஆதம் தாசன் ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

vanitha vijayakumar

vanitha vijayakumar

ஹரிநாடார் தயாரித்து நடித்திருக்கும் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வனிதா நடித்து வருகிறார். தற்போது வனிதா ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அதில்  அருவா வைத்தபடி கெத்தாக இருப்பதுபோல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலாவது மட்டும் இல்லாமல் பலரும் வீராச்சாமி போல் வனிதாவும் கெத்தாக உள்ளார் என கூறி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top