தன்னைத்தானே மீம்ஸ் போட்டு கலாய்த்துக் கொண்டு வனிதா.. என்ன ஒரு ஹியூமர் சென்சா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பான பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தினமும் ஏதாவது ஒரு செய்தி இவரை பற்றி வெளிவந்த வண்ணம் உள்ளது. என்னதான் இவரை பற்றி நெகட்டிவ் கருத்துகள் நிலவி வந்தாலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் வனிதா சமீபத்தில் தான் சந்தித்த பிரச்சனைகளான பீட்டர் பால் திருமண – பிரிவு, விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் ஷோவில் பங்கேற்று ஜட்ஜ் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டு வெளியேறியது, நடிகர் பவர் ஸ்டார் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலானது என அனைத்திற்கும் தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.

எவ்வளவு தான் சர்ச்சைகள் பிரச்சினைகள் இருந்தாலும் தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ள வனிதா பிஸியாக நடித்து வருகிறார். எப்போதும் யாருடனாவது சண்டை, கோபம் என அதிரடி காட்டி வரும் வனிதா தனக்குள் இருக்கும் ஹியூமர் சென்ஸை வெளிப்படுத்தி உள்ளார்.

வனிதா தனது சமீபத்திய இன்ஸ்டா பதிவில் மீம் ஒன்றை பதிவிட்டு அவரிடம் உள்ள நகைச்சுவை உணவர்வை வெளிப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இவரின் இந்த நகைச்சுவை உணர்வு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

vanitha-twit
vanitha-twit

வனிதா பதிவிட்டுள்ள மீம் வடிவேலு ஹோட்டலுக்கு சென்று ஊத்தாப்பம் கேட்க்கும் பிரபலமான காமெடியை டெம்ப்லேட்டாக கொண்டுள்ளது. இதில், ‘குண்டாகவும் இல்லாம ஒல்லியாகவும் இல்லாமல் நல்ல மூக்கும் முழியுமா சமையல் தெரிஞ்ச Chubbyஆ ஒரு பொண்ணு வேணும்’ என வடிவேலு கேட்பது போலவும் அதற்கு சர்வர் ‘அண்ணனுக்கு ஒரு வனிதா’ என சொன்வது போலவும் அந்த மீம் உள்ளது.

vanitha-twit
vanitha-twit

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் இது மீம் பேஜ் என ஒரு நொடி நினைத்துவிட்டோம் என்று கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர் வனிதாக்குள்ள இப்படி ஒரு ஹியூமர் சென்சா என கேட்டு வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்