Tamil Cinema News | சினிமா செய்திகள்
வனிதாவின் புது கிரஸ் இந்த நடிகர்தானாம்.. ட்விட்டரில் அவரே வெளியிட்ட தகவல்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் மிகவும் பிரபலமான நடிகை வனிதா தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தன் கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள வனிதா அனல்காற்று, 2கே அழகானது காதல், அந்தகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இதுதவிர நடிகர் பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் என்ற படத்திலும் வனிதா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்காக பவர் ஸ்டாருடன் இணைந்து வனிதா நடத்திய போட்டோ ஷூட் வைரலானது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் வைரல் ஸ்டார் என்ற பட்டத்துடன் அறிமுகமாகிறார் வனிதா விஜயகுமார்.
மேலும் வசந்த பாலனின் படத்திலும் நடிகை வனிதா விஜயகுமார் ஒப்பந்தமாகியுள்ளார். அர்ஜூன் தாஸ் நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள நடிகை வனிதா, தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

vanitha vijayakumar
இந்நிலையில் நடிகர் பிரசாந்தின் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வனிதா, ஹேண்ட்சம் அன்ட் ஹாட்.. அந்த நாட்களில் இருந்து எப்போதும் நான் உங்களின் ஒரு பெரிய ரசிகை… இன்னும் என்னால் காத்திருக்க முடியாது.. #அந்தகன் பேங் பேங் பேங்… டப்பிங் மற்றும் பிரமிப்பு.. நான் காத்திருக்கிறேன் பிரசாந்த்.. கம் பேக்கிற்காக உற்சாகத்துடன் காத்திருக்கிறேன்.. ராக் ஆன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் நடிகர் பிரசாந்தின் அப்பாவும் நடிகர் மற்றும் இயக்குநருமான தியாகராஜனுடன் எடுத்துள்ள போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வனிதா. இந்த போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
