4வது திருமணத்தில் அவருக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா.? நயன்தாராவை வம்பிழுக்கும் வனிதா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. சமீபகாலமாகவே நடிகை வனிதா தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஏற்கனவே 2 திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த ஆண்டு அவசர அவசரமாக மூன்றாவது திருமணம் செய்து கொண்டு தற்போது அவரையும் பிரிந்து வாழ்கிறார்.

இதுபோன்று தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் வனிதா பவர் ஸ்டார் சீனிவாசனுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.

புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் வனிதாவிற்கு 4வது திருமணமா? என கேள்வியெழுப்பி வந்தனர். மேலும் வனிதா பவர்ஸ்டாருடன் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோஷூட் புகைப்படங்களும் பரவியது. பின்னர் தான் இது பிக்கப் டிராப் என்ற படத்தின் புரமோஷனுக்கான போஸ்டர்கள் என தெரியவந்தது.

இருந்தாலும், நெட்டிசன்கள் பலரும் வனிதாவை மோசமாக விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் தான் வனிதா ரசிகர்கள், ராஜாராணி படத்தின் புரமோஷனுக்காக நயன்தாரா மற்றும் ஆர்யா திருமணம் செய்வது போன்ற போஸ்டர்களை வெளியிட்டு வைரலாக்கினர்.

ஆனால் அதனை மற்ற ரசிகர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனால் கடுப்பான வனிதா ரசிகர்கள் இதையே தற்போது வனிதா செய்தால் விமர்சனம் செய்வதா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

vanitha-nayanthara
vanitha-nayanthara

இந்நிலையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜாராணி பட போஸ்டரை பகிர்ந்து, இதை நான் மறந்துவிட்டேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து சகோதரிகளுக்கும் மிக்க நன்றி என கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்