Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எஸ்.பி.பியின் அந்த சூப்பர் ஹிட் பாடலை பாடச் சொல்லி விஜய்யை தொந்தரவு செய்தேன்- வைரலாகுது வனிதா விஜயகுமாரின் ட்வீட்

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 25ஆம் தேதி மாரடைப்பால் மருத்துவமனையில் மரணமடைந்த நிலையில் அவரது உடல் நேற்று போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் பண்ணை தோட்டத்தில் அவரது இறுதி சடங்குகள் நடந்தது. பலரும் நேரில் சென்று தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.

பல சினிமா நட்சத்திரங்கள் வீடியோ, சமூகவலைத்தள பக்கங்கள் வாயிலாக தங்களின் இரங்கல் செய்தி, SPB அவர்களின் நினைவுகள், பாடல்கள் பற்றி பதிவிட்டு வருகின்றனர்.

vanitha vijakumar tweet

அந்தவகையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகை வனிதா விஜயகுமார் ட்வீட் செய்தார். இன்று நடிகர் விஜய் குறித்தும் ட்வீட் செய்துள்ளார். நேற்று பாலசுப்பிரமணியத்தின் இறுதி சடங்கிற்கு விஜய் சென்று தனது மரியாதையை செலுத்தினார். அப்புகைப்படம் இணையதளங்களில் வைரலானது.

விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அந்த காலகட்டத்தில் அர்ஜுனின் கர்ணா படத்தின் பாடல் செம ஹிட்.

“எஸ்பிபி பாடிய மலரே மெளனமா பாடலை பலமுறை பாட சொல்லி விஜய்யை நச்சரிப்பேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு, பின்னர் எனக்காக பாடினார். நினைவுகள்.. ”

vanitha vijakumar tweet

ஒரே ட்வீட்டில் எஸ்.பி.பியையும் விஜய்யையும் பற்றி பதிவிட்டு வைரலாகி வருகிறார் வனிதா விஜயகுமார். நீங்க நடத்துங்க மேடம் என்கின்றனர் நெட்டிசன்கள்.

Continue Reading
To Top