Connect with us

Cinemapettai

திருவிழாவில் டான்ஸ் ஆடுபவர் அபி.. எனக்கும் டான்ஸ் ஆட ஆசை.. கணவருக்கு பிடிக்கலை.. டிக்டாக் வினிதா

vanitha

Tamil Nadu | தமிழ் நாடு

திருவிழாவில் டான்ஸ் ஆடுபவர் அபி.. எனக்கும் டான்ஸ் ஆட ஆசை.. கணவருக்கு பிடிக்கலை.. டிக்டாக் வினிதா

தேவகோட்டையைச் சேர்ந்த வினிதாவுக்கும் ஆரோக்கிய லியோவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. ஆரோக்கிய லியோ சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

கணவன் சிங்கப்பூர் சென்ற நிலையில் டிக்டாக் வீடியோக்கள் பார்த்து பொழுதை கழித்தார் வினிதா.அப்போது டிக்டாக்கில் திருவாரூரை சேர்ந்த அபியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அபியின் பெயரை தன் கையில் பச்சை குத்தும் அளவுக்கு இரு தோழிகளும் நெருக்கமாகி உள்ளனர்.

இந்நிலையில வீட்டில் உள்ள நகையை திருடிக்கொண்டு அபியுடன் வினிதா ஓடிப்போனதாக போலீசில் புகார்கள் தரப்பட்டது. இதையடுத்து தேவக்கோட்டை மகளிர் போலீசில் வினிதாவை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் சுருக்கம்தான் இது: “டிக்-டாக் ஆப் மூலமாதான் எனக்கு அபியை தெரியும். கொஞ்ச நாளிலேயே நெருங்கி பழகினோம். திருவிழாக்களில் நடக்கும் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுபவர்தான் அபி.

இப்படி அபி ஆடிய டான்ஸ் எல்லாம் டிக்-டாக்கில் இருந்தது. அதை பார்த்ததும், எனக்கும் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதனால் ஒருமுறை என் கணவரை அழைத்துக் கொண்டு, அபியின் டான்ஸ் புரோகிராம் நேரில் பாரத்தேன். அப்போ என் கணவர் இதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இதுக்கப்புறம்தான் எனக்கு அபியுடன் நட்பு அதிகமானது. இந்த விஷயம் தெரிந்துதான் என் கணவர் என்கிட்ட சண்டை போட்டு அடிச்சார். அதனால, என் அக்கா நகை 20 பவுன் எடுத்து கொண்டு, அபியுடன் சென்றேன்.

ஆனால் எங்க வீட்டில் புகார் தந்து, போலீசார் என்னை தேடுகிறார்கள் என்று தெரிந்ததும், நான் சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் தந்தேன்” என்றார். இதையடுத்து போலீசார் அபியிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top