Connect with us
Cinemapettai

Cinemapettai

vanitha-paul

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பீட்டர் பால் இடத்தை நிரப்பிய வனிதா.. செம்ம வார்னிங்! இந்த கொக்கியாது ஒழுங்காக மாட்டுமா? 

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார்.

அதனைத்தொடர்ந்து வனிதா ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆனார். இந்த நிகழ்ச்சியில் பெற்ற பெரும் வெற்றியின் காரணமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து நடத்திவந்தார் வனிதா.

மேலும் வனிதா, அந்த யூடியூப் சேனலின் விஷ்வல் எடிட்டராக இருந்த பீட்டர் பாலை காதலித்து கடந்த ஜூன் மாதம் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் வனிதா பீட்டர் பாலை விட்டு பிரிந்ததாக அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதனால், சில காலங்களாகவே பீட்டர் பால் இல்லாமல் தன்னுடைய யூடியூப் சேனலை நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்த வனிதா  திடீரென தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ‘ஆந்திரா பச்சி புலுசு’ என்ற ரெசிபியை  பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இதனைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், ‘தற்போது உங்களுடைய யூடியூப் சேனலில் எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் வேலையை யார் பார்ப்பது’ என்று கேட்டிருந்தார்.

அதற்கு வனிதா, ‘என்னுடைய யூடியூப் பார்ட்னர் & டெக்னிக்கல் டீம்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

அதாவது இதன் மூலம் பீட்டர் பால் இல்லாவிட்டாலும் தன்னுடைய யூடியூப் சேனலை சிறப்பாக நடத்த முடியும் என்று மறைமுகமாக அனைவருக்கும் கூறியுள்ளார் வனிதா. மேலும் வனிதாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

vanitha-marriage-issue

vanitha-marriage-issue

Continue Reading
To Top