Connect with us
Cinemapettai

Cinemapettai

vanitha-chitra-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சித்ரா சாவை வைத்து சம்பாதிக்கும் வனிதா.. கண்டபடி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

விஜய் டிவியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்ற சித்ரா மிகப்பெரிய சினிமா நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் விசாரணையில் சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்யவில்லை, கொலை நடந்திருக்கிறது என்பது போல கேஸ் திரும்பியது. தற்போது அவரது கணவரிடம் தொடர்ந்து 8 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சித்ரா இறந்ததை நினைத்து வருத்தப்படுவதாக கூறியிருந்த வனிதா, இது குறித்து விரிவாக தன்னுடைய யூடியூப் சேனலில் பேசுவதாக சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதனால் கடுப்பான ரசிகர்கள், உங்களுக்கு பணம் சம்பாதிக்க சித்ராவின் சாவு தான் கிடைத்ததா? என வனிதாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

fans-comments-on-vanithas-insta

fans-comments-on-vanithas-insta

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் நடிகைகளை விட ரசிகர்கள் மத்தியில் சமீபகாலமாக பிரபலமாக இருப்பவர் தான் வனிதா விஜயகுமார். இவருடைய இல்லற வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் வனிதா விஜயகுமார் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார். குக்கிங் சேனலாக தொடங்கப்பட்ட அந்த யூடியூப் சேனலில் தற்போது சித்ரா இறந்ததைப் பற்றி பேசப் போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டதால் இந்த வினை.

கடந்த சில மாதங்களாகவே வனிதாவின் பெயர் செமையாக டேமேஜ் ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் நல்லது செய்ய வந்தாலும், கெட்டது செய்வது போலவே பிம்பம் ஏற்பட்டுள்ளது வருத்தத்திற்குரியது.

Continue Reading
To Top