fbpx
Connect with us

Cinemapettai

150 கேமரா முன்னாடி டி-சர்ட்டை கழட்டி மாற்றிய பிரபலம்.. பிக் பாஸ் செகெண்டு இன்னிங்சை ஆரம்பித்த வாயாடி வனிதா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

150 கேமரா முன்னாடி டி-சர்ட்டை கழட்டி மாற்றிய பிரபலம்.. பிக் பாஸ் செகெண்டு இன்னிங்சை ஆரம்பித்த வாயாடி வனிதா!

தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை வனிதா.

அதிலும் இவருடைய மூன்றாவது திருமணத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகவே மாறிவிட்டார். அந்த சமயத்தில் நடிகை கஸ்தூரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார்.

அதன்பின் சில மாதங்கள் இந்த பிரச்சனை நமத்துப் போன பட்டாசா இருந்து தற்போது அணுகுண்டைப் போல் கொளுத்திப் போட ஆயத்தமாகிவிட்டார் வனிதா.

ஏனென்றால் இவர் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருவதால், அதில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீசன்4 நிகழ்ச்சி பற்றி இன்னொரு கமல் போன்றே நாள்தோறும் விவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் அணியும் உடைகளுக்கு கட்டுப்பாடு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த வனிதா, ” யார் எப்படி வேணாலும் டிரெஸ் பண்ணிக்கலாம்.

ஏன் கஸ்தூரி கூட போன சீசனில் 150 கேமரா முன்னாடி டிசர்ட்டை கழட்டி மாற்றினார். அந்த அளவிற்கு பிக்பாஸ் வீடு சுதந்திரமாக இருக்கும்” என்று பதிலளித்தார்.

இப்படி ‘சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி’ என்பதுபோல் கொஞ்ச நாளா வம்பு தும்புக்கு போகாமல் புருஷனோட ஊர் சுற்றிக் கொண்டிருந்த வனிதா, வாய் சும்மா இருக்காமல் திரும்பவும் வம்பிழுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

kasthuri

kasthuri

Continue Reading
To Top