Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸ் அல்டிமேட்டில் முதலைக்கண்ணீர் வடிக்கும் வத்திக்குச்சி வனிதா.. என்னா நடிப்புடா சாமி!

bb-ultimate-vanitha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட்டில் முதலைக்கண்ணீர் வடிக்கும் வத்திக்குச்சி வனிதா.. என்னா நடிப்புடா சாமி!

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இரண்டே வாரத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, விறுவிறுப்புடன் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஏதாவது ஒரு வம்பு இழுத்துக் கொண்டிருக்கும் வத்திக்குச்சி வனிதா திடீரென்று பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர் ஷாரிக் உடன் கடுமையாக விவாதித்த பின் பிக்பாஸ் இடம் தனியாக சென்று அழுது புலம்புகிறார்.

‘நான் என்ன தப்பு பண்றேன், யாரை ஏமாற்றி விளையாடுகிறேன். ஒவ்வொருமுறையும் என்னை தான் குற்றவாளியாக மாற்றுகிறார்கள்’ என விம்மி விம்மி அழுகிறார். எனவே இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது முழுக்க முழுக்க நடிப்பு. வனிதா தன்னுடைய உச்சகட்ட நடிப்பை பிக்பாஸ் அல்டிமேட் காட்டிக் கொண்டிருக்கிறார். எனவே சர்ச்சைகளை அசால்டாக சமாளிக்கும் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன செய்யப் போகிறோம் என்பதை சரியாக பிளான் போட்டு அவ்வாறே நடத்திக்கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமலஹாசன் அவ்வபோது வனிதாவை கண்டித்து சரி செய்ய முயற்சித்தாலும், அதை அப்பொழுது தலையாட்டிக் கொண்டு அதன் பிறகு வனிதா அவருடைய இஷ்டத்திற்கு ஆட்டத்தை ஆடுகிறார்.

இதனால் பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்களும் வனிதாவை பார்த்தாலே எரிச்சல் ஏற்படுகிறது என்பதை உணர்வதால் எவ்வளவு சீக்கிரம் எலிமினேட் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எலிமினேட் செய்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என்றும் வனிதாவை பிக்பாஸ் ரசிகர்கள் குறி வைத்திருக்கின்றனர்.

Continue Reading
To Top