Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷகிலாவின் வீடியோவில் திடீரென தோன்றி ஷாக் கொடுத்த வனிதா! பிரேக்கப் விரக்தியில் ..
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஷோவின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவருக்கும் பீட்டர் பாலுக்கும் நடைபெற்ற திருமணம் சில நாட்களுக்கு முன்பு பிரேக்கப்பில் முடிந்தது.
இதனால் வனிதா சோகக் கடலில் மூழ்கி இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் நடிகை ஷகிலாவுடன் இணைந்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் வனிதா.
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு பீட்டர் பால் அதிகமாக குடிப்பதால் பிரிந்து விட்டதாகவும், சில நாட்கள் சமூக வலைத்தளத்திலிருந்து விலகி இருக்கப் போவதாகவும் சொல்லியிருந்தாங்க நடிகை வனிதா.
ஆனால் தற்போது திடீரென வனிதா பிரபல நடிகையான ஷகிலா உடன் இணைந்து பேட்டி ஒன்றில் பங்கேற்று இருக்கிறார்.
இந்த வீடியோவில் ஷகிலா வனிதாவிடம், ‘ஏன் டல்லா இருக்க’ என்று கேட்க, ‘இதுதான் பிரேக்கப் மேக்கப்’ என்று சிரிக்கிறார் வனிதா. இதற்கு ஷகிலா, ‘உனக்கு ஒன்னு ரெண்டு தான்.. எனக்கு ஒரு 13,14 இருக்கு அதனால நான் இத ட்ரை பண்ணல’ எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்த வீடியோவின் இறுதியில் ஷகிலா ‘நம்ம எல்லாம் பண்ணா வேற லெவல்ல பண்ணனும்’ என்று வனிதாவை பார்த்து கூறியிருப்பது ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.
இவ்வாறு இருக்க சகிலா மற்றும் வனிதா ஆகியோரின் வீடியோவை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
மேலும் ‘வனிதா பிரேக்கப் காரணமா அழுதுட்டு இருப்பாங்கன்னு பார்த்தா. இப்படி கெத்தா ஒக்காந்து ஷகிலா கூட இன்டர்வியூ பண்ணிட்டு இருக்காங்க’ என கமெண்ட் அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
